காவல் தூதரிடம் செபம் (Prayer to your Guardian Angel)
(அக்டோபர் 2 அன்று கொண்டாடப்படுகிறது)

இறைவனால் எனக்குக் காவலாகக் கொடுக்கப்பட்ட தூதரே.
இறைவனின் பேரன்பால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை,
இன்றைய நாளில் ஆசிர்வதித்து என்னோடிருந்து,
என்னை ஒளிர்வித்து, பாதுகாத்து, வழிநடத்தி ஆண்டருளும்.
ஆமென்.