ஆண்டவருடைய தூதர் (Angelus)

ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
அவர் தூய ஆவியால் கருவுற்றார்.
(அருள்நிறை மரியே...)
இதோ ஆண்டவருடைய அடிமை,
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்.
(அருள்நிறை மரியே...)
வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார்.
(அருள்நிறை மரியே...)
மு: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி.
ப: இறைவனின் புனித தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
ஆண்டவரே, வானதூதர் வழியாக உம்முடைய திருமகன் இயேசு கிறிஸ்து மனிதர் ஆனதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சியை அடையும் பொருட்டு, எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.