கிறிஸ்துவின் ஆன்மாவே (Anima Christi)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் உடலே, என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து வந்த தண்ணீரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றியருளும்.
நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாய்த்தருளும்.
உமது திருக்காயங்களுக்குள் என்னை மறைத்துக்கொள்ளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.
தீய பகைவனிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
எனது இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உமது புனிதர்களோடு உம்மை என்றென்றும் புகழும் பொருட்டு உம்மிடம் வரக் கட்டளையிடும்.
ஆமென்.