சக்கரியாவின் பாடல் (Benedictus)

லூக்கா 1:68-79
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குப் போற்றி!
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து மீட்டுள்ளார்.
தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமையுள்ள மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.
தொடக்கமுதல் தம் தூய இறைவாக்கினர்கள் வாயால்
அவர் உரைத்தபடியே,
நம் பகைவர்களிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.
அவர் நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டித்
தம் தூய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
நம் தந்தை ஆபிரகாமுக்கு அவர் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதியாவது:
"நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு,
தூய்மையோடும் நீதியோடும் வாழ்நாளெல்லாம்
அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்ய அருள்வார்" என்பதாகும்.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினன் எனப்படுவாய்;
ஏனெனில் ஆண்டவருக்கு வழியை ஆயத்தம் செய்ய அவருக்கு முன்னே செல்வாய்.
பாவமன்னிப்பால் மக்கள் மீட்படைய
அவர்களுக்கு அறிவிப்பாய்.
நம் கடவுளின் பரிவுள்ள இரக்கத்தினால்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
இருளிலும் இறப்பின் நிழலிலும் வாழ்வோர்க்கு ஒளி தரவும்,
அமைதி வழியில் நம் காலடிகளைச் செலுத்தவும் அது வருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக.
தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.