பிழை அறிக்கையிடுதல் (I Confess)



எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எப்பொழுதும் கன்னியான புனித மரியாவிடமும்,
அதிதூதரான புனித மிக்கேலிடமும்,
திருமுழுக்கு யோவானிடமும்,
திருத்தூதர்களான புனித பேதுருவிடமும், புனித பவுலிடமும்,
எல்லாப் புனிதர்களிடமும்,
நான் பாவம் செய்தேன் என அறிக்கையிடுகிறேன்.

நினைவாலும் சொல்லாலும் செயலாலும்
மிகவும் பாவம் செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.

ஆகையால் எப்பொழுதும் கன்னியான புனித மரியாவையும்,
அதிதூதரான புனித மிக்கேலையும்,
திருமுழுக்கு யோவானையும்,
திருத்தூதர்களான புனித பேதுருவையும், புனித பவுலையும்,
எல்லாப் புனிதர்களையும்,
எங்கள் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.

ஆமென்.


மன்னிப்பு வேண்டுதல் (Absolution)
குரு: எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

பதில்: ஆமென்.