கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை



ஆண்டவரே இரக்கமாயிரும்…
கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
ஆண்டவரே இரக்கமாயிரும்…

விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகினைமீட்ட திருமகனாகிய இறைவா …
தூய ஆவியாராகிய இறைவா….
மூன்று ஆள்களாயிருக்கும் ஒரே இறைவா…

புனித மரியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் அன்னையே
கன்னிகையான அன்னையே
இயேசுவின் அன்னையே
இறைஇரக்கத்தின் அன்னையே
மிகத்தூய்மையான அன்னையே
கற்புநெறி சிறந்த அன்னையே
பாவ மாசில்லா அன்னையே
கன்னித்தூய்மை மாறா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
நல்லாலோசனைதரும் அன்னையே
படைத்தவரின் அன்னையே
மீட்பரின் அன்னையே
இறைவிருப்பம் ஏற்ற அன்னையே
வணக்கத்திற்குரிய அன்னையே
மாண்பு மிகுந்த அன்னையே
அருள் சக்திநிறைந்த அன்னையே
இரக்கம் நிறைந்த அன்னையே
நம்பிக்கை மிகுந்த அன்னையே
இறை தர்மக்கண்ணாடியான அன்னையே
இறைஞானம் மிகுந்த அன்னையே
மனித மகிழ்ச்சியின் காரணமான அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
சிறந்த பக்திமிகு அன்னையே
ரோஜாமலர் தன்மை கொண்ட அன்னையே
தாவீது அரச கோபுரமான அன்னையே
அதிசய கோபுரமான அன்னையே
அருள்மிகு ஆலயமான அன்னையே
உடன்படிக்கை பேழையான அன்னையே
விண்ணக வழியான அன்னையே
விடிவெள்ளியான அன்னையே
உடல்நலம் தரும் அன்னையே
அடைக்கலம் தருகின்ற அன்னையே
தேற்றுகின்ற அன்னையே
உதவிக்கரம் நீட்டும் அன்னையே
வானதூதர் வாழ்த்திய அன்னையே
குல முதுவர்களின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சியர்களின் அரசியே
அருளுதவியாளர்களின் அரசியே
கற்புநெறி காக்கும் அரசியே
அனைத்து புனிதர்களின் அரசியே
அமல உற்பலியான அரசியே
திருச்செபமாலையின் அரசியே
எங்கள் குடும்பத்தின் அரசியே
எங்கள் சமாதான அரசியே


உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே,
எங்கள் பாவங்களைப் போக்கியருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே,
எங்கள் பிரார்த்தனைக் கேட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்


இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படி.
இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக மன்றாடும்.


செபிப்போமாக

இறைவா! உம் திருமுன் செப சிந்தனையுடன் கூடியுள்ள இக்குடும்பத்தைக் கண்ணோக்கி எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்தும் எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்

ஆமென்.