மரியாளின் புகழ்ப்பாடல் (Magnificat)

லூக்கா 1:46-55
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் மகிழ்ச்சியில் பூரிக்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை ‘பேறுபெற்றவர்’ என்பர்.
ஏனெனில் வல்லமையுடையவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
‘தூயவர்’ என்பது அவரது பெயராகும்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் வலிமைமிக்க புயத்தினால் ஆற்றல் காட்டினார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்தார்.
வல்லமையுடையோரை அரியணையினின்று தூக்கி எறிந்தார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தினார்.
பசித்தோரை நன்மைகளால் நிரப்பினார்;
செல்வரை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் நம் தந்தை ஆபிரகாமையும்
அவர்தம் மரபினரையும் என்றென்றும் நினைவுகூர்ந்து,
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்தார்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக.
தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.