சன் தாமியானோ சிலுவை முன் செபம்



உன்னதமான மாட்சிமைமிக்க இறைவா,
என் உள்ளத்தின் இருளை அகற்றும்.

ஆண்டவரே, உமது தூய மற்றும் உண்மையான திருவுளத்தை நான் நிறைவேற்றும் பொருட்டு,
எனக்கு உண்மையான விசுவாசத்தையும், உறுதியான நம்பிக்கையையும்,
நிறைவான அன்பையும், அறிவையும், உணர்வையும் தந்தருளும்.

ஆமென்.


(புனித பிரான்சிஸ் ஆசிசியார்)