காலை ஆராதனைச் செபம்



என் இறைவா, உம்மை ஆராதிக்கின்றேன், என் முழு இதயத்தோடும் உம்மை நேசிக்கின்றேன். என்னை உருவாக்கி, மீட்டு, ஒரு கிறிஸ்தவனாகத் தேர்ந்து கொண்டு, இந்த இரவு முழுவதும் என்னைப் பாதுகாத்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றைய நாளில் நான் செய்யும் செயல்களை எல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவை அனைத்தும் உமது திருவுள்ளத்தின்படியும், உமது மேலான மகிமைக்காகவும் அமைய அருள்புரியும்.

என் அன்புத்தாய் மரியாவே, இன்று என்னைப் பாதுகாத்தருளும். என் காவல் தூதரே, என்னைப் பராமரித்தருளும். புனித யோசேப்பே, இறைவனின் புனிதர்களே, எனக்காக (எங்களுக்காக) வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆமென்.