காலை ஒப்புக்கொடுத்தல் (The morning offering)

ஓ இயேசுவே, மரியாவின் மாசற்ற இதயம் வழியாக, இன்றைய நாளில் நான் செய்யும் செபங்கள், வேலைகள், மகிழ்ச்சி மற்றும் துன்பங்கள் அனைத்தையும், உமது திரு இதயத்தின் கருத்துக்களுக்காகவும், திருப்பலியோடு இணைத்தும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். மேலும் என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், என் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நலத்திற்காகவும், சிறப்பாகத் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகவும் இவற்றை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஆமென்.