மாலை செபம் (The evening prayer)



என் இறைவா, இன்றைய நாளின் முடிவில், நீர் எனக்கு அளித்த அனைத்து அருட்கொடைகளுக்காகவும் என் முழு இதயத்தோடு உமக்கு நன்றி கூறுகிறேன்.

அவற்றை நான் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தாமல் போனதற்காக வருந்துகிறேன். உமக்கு எதிராக நான் செய்த எல்லாப் பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்படுகிறேன்.

என் இறைவா, என்னை மன்னித்தருளும், இந்த இரவு முழுவதும் என்னைப் பாதுகாத்தருளும். என் அன்புத் தாய் மரியாவே, உம்முடைய பாதுகாப்பில் என்னை ஏற்றுக்கொண்டருளும். புனித யோசேப்பே, என் காவல் தூதரே, இறைவனின் புனிதர்களே, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆமென்.