இறையழைப்பிற்கான செபம்

தூய ஆவியானவரே,
ஞானத்தின் மற்றும் இறை அன்பின் ஆவியே, இளைஞர்கள் எந்த அழைப்பின் வழியாகக் கடவுளுக்கு மிகச் சிறந்த முறையில் பணியாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, உமது அறிவையும், விவேகத்தையும், ஆலோசனையையும் அவர்களுக்கு வழங்கியருளும்.
இறைவனின் திருவுளத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான துணிவையும் வலிமையையும் அவர்களுக்கு அளித்தருளும்.
அவர்களுடைய தள்ளாடும் காலடிகளை வழிநடத்துவீராக; அவர்களுடைய தீர்மானங்களை உறுதிப்படுத்துவீராக; அவர்களுடைய கற்பைக் காத்தருளுவீராக; அவர்களுடைய மனதைப் பண்படுத்துவீராக; அவர்களுடைய இதயங்களை வென்றெடுப்பீராக; இறைப்பணியில் அவர்கள் உழைக்க வேண்டிய திராட்சைத் தோட்டங்களுக்கு அவர்களை வழிநடத்திச் செல்வீராக.
ஆமென்.