பரலோக இராக்கினியே மகிழ்ச்சி கொள்ளும் (Regina Coeli)

(பாஸ்கா காலத்தில் சொல்லப்படுவது)
விண்ணக அரசியே, மகிழ்ச்சி கொள்ளும்! அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர்! அல்லேலூயா.
அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்! அல்லேலூயா.
கன்னி மரியே, அகமகிழ்ந்து பூரிப்படைந்து வாரும்! அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா.
செபிப்போமாக:
இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகிற்கு மகிழ்ச்சி அளிக்கத் திருவுளமானீர். அவருடைய தாயாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் நிலைவாழ்வின் பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.