தூய ஆவியே எழுந்தருளி வாரும் (Come Holy Spirit)



தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்முடைய விசுவாசிகளின் உள்ளங்களை நிரப்பும்; அவற்றில் உமது அன்புத் தீயைப் பற்றியெரியச் செய்யும்.


மு: உமது ஆவியை அனுப்பிடும், அவை படைக்கப்படும்.

ப: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.


செபிப்போமாக:

இறைவா, தூய ஆவியின் ஒளியினால் உம்முடைய விசுவாசிகளின் உள்ளங்களுக்கு அறிவொளி ஊட்டினீரே. அந்த ஆவியின் அருளால் நாங்கள் சரியானவற்றைத் தேர்ந்து கொள்ளவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ச்சியுறவும் எங்களுக்கு அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.